section 2
எதிர்பாராச் செலவு நிதியம் ஒன்றை நிறுவுதல்
The Tamil Nadu Contingency Fund Act, 1954(1) தமிழ்நாடு மாநிலத் தொகுநிதியத்திலிருந்து மாற்றப்பட்ட நூற்றைம்பது கோடி ரூபாயைக் கொண்டதும், "தமிழ்நாடு மாநிலத்தின் எதிர்பாராச் செலவு நிதியம்" என்றழைக்கப்படும் முன்பணத்தின் தன்மையில் தமிழ்நாடு மாநிலத்திற்கென எதிர்பாராச் செலவு நிதியம் ஒன்று நிறுவப்படுதல் வேண்டும். வரம்புரையாக, 1992 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 10 ஆம் நாளன்று தொடங்கி 1993 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 31 ஆம் நாளுடன் முடிவடையும் காலஅளவின்போது, இந்த உட்பிரிவானது, "எழுபத்தைந்து கோடி ரூபாய்" என்ற சொற்களுக்காக "நூற்றைம்பது கோடி ரூபாய் எனும் சொற்களானது மாற்றாக அமைக்கப்பட்டுள்ளன என்ற மாற்றத்திற்கு உட்பட்டு, செல்திறம் பெறுதல் வேண்டும். (2) அத்தகைய எதிர்பாராச் செலவு நிதியமானது தமிழ்நாடு ஆளுநரின் பொறுப்பில் இருக்கும்; மேலும், அரசமைப்பின் 205 ஆம் உறுப்பின்படி அல்லது 206 ஆம் உறுப்பின்படி மாநிலச் சட்டமன்றத்தின் சட்டத்தினால், அத்தகைய செலவினங்களுக்கு அதிகாரமளிக்கும் வரையில், எதிர்பாராச் செலவினங்கள் எதனையும் சமாளிப்பதற்காக அதிலிருந்து முன்பணங்கள் அளிப்பதற்கு ஆளுநர் அதிகாரம் உடையவர் ஆவார். (3) மேற்கூறப்பட்டவாறான அத்தகைய செலவினம் எதனும், சட்டத்தினால் அதிகாரமளிக்கப்படும் போதெல்லாம், செலவினங்களைச் சமாளிப்பதற்காக அத்தகைய நிதியிலிருந்து பெறப்பட்ட முன்பணத்திற்குச் சமமான தொகையை மாநில அரசு, எதிர்பாராச் செலவு நிதியத்திற்கு ஈடுசெய்தல் வேண்டும்.
Study data processing for this section.
PDF: pending for this language.